‘மூளையை உண்ணும் அமீபா’ நோய் மலேசியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை; விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தல்

கோலாலம்பூர்:

“மூளையை உண்ணும் அமீபா” அல்லது Naegleria fowleri infection தொற்றுநோய் இன்னும் மலேசியாவில் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் நீர் நிலைகளில் குறிப்பாக ஆறு , குளம், ஏரி மற்றும் நீர் வீழ்ச்சி போன்றவற்றில் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையின் போதும் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக அமீபா காணக்கூடிய ஏரிகள், குளங்கள் அல்லது ஆறுகளின் அடிப்பகுதியில் எந்த வண்டலையும் தோண்டவோ அல்லது சேதப்படுத்தவோ கூடாது என்றும் நாசி வழியாக உடலுக்குள் செல்லக்கூடிய இந்த அமீபாவால் மாசுபட்டிருக்கும் நீரில் மூழ்குவது அல்லது நீந்துவது போன்ற செயல்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சுகாதார தலைமை இயக்குநர், டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

50 வயதுடைய தென் கொரியர் ஒருவர் மூளையை உண்ணும் அமீபா நோயால் கடந்த டிசம்பர் 21 அன்று இறந்ததாகவும், அவர் டிசம்பர் 10 ஆம் தேதி நாடு திரும்புவதற்கு முன்பு தென்கிழக்கு ஆசிய நாட்டில் நான்கு மாதங்கள் தங்கியிருந்ததாகவும் அந்நாட்டு அரசு செவ்வாயன்று (டிசம்பர் 27), அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கை மலேசிய சுகாதார அமைச்சகத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

Naegleria fowleri என்பது தெர்மோபிலிக் அமீபா அல்லது புரோட்டோசோவான் ஒற்றை செல் உயிரினமாகும், இது உலகம் முழுவதும் காணப்படுகிறது, குறிப்பாக ஏரிகள், குளங்கள், ஆறுகள், வெந்நீர் ஊற்றுகள் மற்றும் நிலத்தில் உள்ள நன்னீர் வாழ்விடங்களில் இருக்கும்.

இது முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படும் தொற்று மூலம் மூளையைச் சேதப்படுத்துவதால் இதற்கு “மூளையை உண்ணும் அமீபா” என்று பெயர்.

வெளிப்புற நீர்நிலையில் ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிறகு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களுக்குப் பிறகு காய்ச்சல், தலைவலி, வாந்தி அல்லது கழுத்து விறைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்றும்” நேற்று புதன்கிழமை (டிச. 28) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ரீ டாக்டர் நூர் ஹிஷாம்தெரிவித்தார்.

மேலே கூறியது போன்ற அறிகுறிகள் பொதுவாக நோய்த்தொற்று ஏற்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு மற்றும் ஒரு நாள் அல்லது 12 நாட்களுக்குப் பிறகு தோன்றும்.

“நோயாளியின் நிலை ஐந்து நாட்களுக்குள் விரைவாக மோசமடையக்கூடும், மேலும் அறிகுறிகள் தோன்றியதிலிருந்து ஒன்று முதல் 18 நாட்களுக்குள் மரணம் ஏற்படலாம்” என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here