இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்களை தவறாக நடத்துவது தொடர்பான வழக்குகளை மலேசியா மறுஆய்வு செய்யும்

ஜகார்த்தா:

நாட்டில் தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்ணை தவறாக நடத்துவது தொடர்பான வழக்குகளை மலேசியா மறுஆய்வு செய்யும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ சம்ரி அப்துல்  காதிர் தெரிவித்துள்ளார்.

“மலேசியாவில் உள்ள வீட்டுப் பணிப்பெண்களின் நல்வாழ்வு மற்றும் நலன் குறித்த இந்தோனேசிய அரசாங்கத்தின் அக்கறையை மற்றும் கவலைகளை தாம் முழுமையாக அறிந்திருப்பதாகவும், தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில் வீட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மலேசியா இந்தோனேசியாவுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று நான் உறுதியளிக்கிறேன்,” என்று நேற்று இந்தோனேசியா வெளியுறவு அமைச்சர் ரெத்னோ மர்சுடி உடன் ஜகார்த்தாவில் நேற்று நடைபெற்ற இரு வழி கூட்டத்திற்குப் பின்னர் சம்ரி செய்தியாளர்களிடம் பேசினார்.

கடந்த ஏப்ரல் 1, 2022 அன்று மலேசியாவில் இந்தோனேசிய வீட்டு உதவியாளர்களைப் பணியமர்த்துதல் மற்றும் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

மலேசியர்களின் அன்றாட வாழ்விலும், மலேசியாவின் சமூக-பொருளாதார மேம்பாட்டிலும் இந்தோனேசிய பணியாளர்கள் மற்றும் வீட்டு உதவியாளர்களின் பங்களிப்புக்காக மலேசியாவின் பாராட்டுக்களை அக்கூட்டத்தில் அமைச்சர் பதிவு செய்தார்.

தற்போது இந்தோனேசியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள டத்தோ ஶ்ரீ சம்ரி, இருதரப்பு விவகாரங்கள், இந்தோனேசியாவின் புதிய தலைநகரான நுசாந்தராவில் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லைகள் மற்றும் நில எல்லைகள் குறித்து விவாதிப்பார் என்று நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here