உங்கள் மனங்கவர்ந்தவர்களுடன் கூடி குதூகலிக்க உல்லாச மையங்கள்

உங்கள் காதலருடனோ  கணவருடனோ கூடிக் குதூகலிக்க –காதலைக் கொண்டாட பல அருமையான கனவு உல்லாச மையங்கள் இருக்கின்றன.விடுமுறையையோ தேனிலவையோ காதல் சந்திப்பையோ கொண்டாட இந்த இடங்கள் பொருத்தமான மையங்களாகும்.

  1. கடலோரக் காட்சிகளுக்காக ஃபோர் சீசன்ஸ் ரிசோர்ட், லங்காவி, கெடா.

FOUR SEASONS RESORT, LANGKAWI ISLAND, KEDAH

புகழ் பெற்ற ஆங்கிலப் படமான ‘கிரேஸி ரிச் ஏசியன்ஸ்’ திரைப் படத்தில் இடம் பெற்ற  உல்லாச தங்கும் விடுதி இதுவாகும்.மலாய் கிராம கலாச்சார பாணியிலான சொகுசான ஆடம்பர அறைகளைக் கொண்டது.வெண்ணிற மணல் பரப்புடன் கூடிய கடற்கரைகளிலிருந்து அந்தமான் கடலை நீங்கள் ரசிக்க முடியும். கடலில் தோன்றும் வித்தியாசமான கடற்பாறைகளையும் காணலாம்.காதலர் இருவர் கூடிக் களிக்க அழகிய காதல் மையம் இதுவாகும்.

  1. கலாச்சாரத்தை ரசிக்க மெஜஸ்டிக் மலாக்கா, மலாக்கா

THE MAJESTIC MALACCA, MELAKA

90 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக எழுந்து நிற்கும் 54 அறைகளைக் கொண்ட அழகிய பாரம்பரிய விடுதி இதுவாகும். தேக்குமர வேலைப்பாடுகள், ஐரோப்பிய பாணி கூரைத் தகடுகள், போர்ஸ்சிலின் தரைகள்,  அற்புதமான சேவைத் தரம் ஆகிய அம்சங்களைக் கொண்ட அனுபவத்தை இங்கு நீங்கள் பெறலாம்.மலாக்காவின் கடந்த  கால வாழ்க்கையையும் அழகியலையும் இங்கு தங்குவது உங்களுக்கு நினைவுபடுத்தும்.உள்ளூர் சமையல் நிபுணர்களின் சமையல் வகுப்புகளில் கலந்து கொண்டு மலாக்காவின் பாரம்பரியத்தை நீங்கள் அனுபவிக்கலாம்.அல்லது ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய மையமாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களை சுற்றிப் பார்க்கலாம்.

  1. காதல் உல்லாசப் பயணங்களுக்காக பெலும் ரெயின்ஃபோரஸ்ட் ரிசோர்ட், பேராக்       BELUM RAINFOREST RESORT, PERAK

பெலும்– தெமங்கோர் மழைக்காடுகளின் அழகை உங்களின் வாசலில் கண்டு களிக்கவேண்டுமா?வாருங்கள் நீங்கள் செல்ல வேண்டிய இடம் பெலும் ரெயின்ஃபோரஸ்ட் ரிசோர்ட்.நீங்களும் உங்கள் மனதுக்குப் பிடித்த காதல் இணையும் பல  உற்சாகமூட்டும் அனுபவங்களை இங்கே பெறலாம்.130 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த மழைக் காடுகளின் ஊடே நீங்கள் நடைப்பயிற்சி செல்லலாம். பரந்து விரிந்த தெமங்கோர் ஏரியில் படகுப் பயணம் செல்லலாம். இதுபோன்ற இன்னும் மறக்க முடியாத அனுபவங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

  1. சுகாதார காரணங்களுக்காக ஓய்வு மையங்கள் – ஓர்சர்ட் வெல்னஸ், மலாக்கா

ORCHARD WELLNESS, MELAKA

வார இறுதியில் ஓய்வெடுப்பது என்பது சுகாதார காரணங்களுக்காகவும் இருக்கலாம். உடல் நலத்திற்காகவும்  மன நலத்திற்காகவும்  ஆன்மீக வலிமைக்காகவும் மன உளைச்சலை தணிப்பதற்காகவும் இயற்கை சூழலுடன் அமைந்த பல இடங்கள் மலேசியாவில் இருக்கின்றன.மலாக்காவில் அமைந்துள்ள ஓர்சர்ட் வெல்னஸ் விடுதியில் இயற்கை சூழ்ந்த விசாலமான, அழகான அறைகளில் நீங்கள் தங்கலாம் .அத்துடன் தனி நபர்களின் உடல் நலத்தையும்  மருத்துவ தேவைகளையும் பூர்த்தி செய்யும் வண்ணம் நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்படுகின்றன. பழமரங்களைக் கொண்ட பண்ணைக்கு நடுவில் இந்த இடம் அமைந்திருக்கிறது. இங்கு வரும் சுற்றுப்பயணிகள் டுரியான், மங்குஸ்தீன், ரம்புத்தான் போன்ற பழங்களை தாங்களே சொந்தமாக பறித்து மகிழும் அனுபவத்தைப் பெறலாம்.உடல் நலத்தையும் மெருகேற்றிக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here