https://www.malaysia.travel/deals/all?campaign=MYKopiExperience
மலேசியா பல்வேறு அம்சங்களில் தனித்தன்மை வாய்ந்தது. சுற்றுலா, கட்டிட அமைப்பு, உணவு என மலேசியா தனித்தன்மை கொண்டது. அவ்வகையில் மலேசியா முழுவதும் உள்ள காப்பி பானமும் தனித்தன்மை வாய்ந்தது.
ஈப்போ வைட் காப்பி
ஈப்போ பழைய நகரில் உருவாக்கப்பட்ட ஈப்போ வைட் காப்பி அனைத்துலக ரீதியில் புகழ்பெற்றது. 19ஆம் நூற்றாண்டில் இந்த வகை காப்பி கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வகை காப்பி சுற்றுப்பயணிகள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றது. குறிப்பாக நேரடி முறையில் மட்டுமன்றி வெண்ணெய் கொண்டும் இந்த வகை காப்பி தயாரிக்கப்படுகிறது. ஆசியாவில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று காப்பி நகர்களில் தாய்லாந்து, தோக்கியோ, ஜப்பானுக்கு நிகராக இந்த ஈப்போ வைட் காப்பி மிகவும் பிரபலம்.
காப்பி 434 / கேப் டெலிவிஷன்
இந்தக் காப்பி 434 -1953ஆம் ஆண்டு அதன் உரிமையாளர் கியார் ஆம் சாயால் கண்டுபிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் இவர் ஆ சாய் என அறியப்படுகிறார். முன்னதாக வழக்கில் இருந்த தொலைபேசியின் 3 இலக்க அழைப்பு எண்ணை இவர் காப்பியின் பெயராகக் கொண்டுள்ளார். இந்த வகை காப்பிக்கு பல இன மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. மலேசியாவின் உள்நாட்டுக் காப்பி கலாச்சாரத்தில் மிகப் புகழ்பெற்ற இடங்களாக விளங்குகிறது ஜோகூரில் உள்ள மற்றொரு நகரான குளுவாங். இங்கு கோ தோங் தோர் என்பவர் 1966ஆம் ஆண்டு டெலிவிஷன் பிராண்ட் காப்பியைக் கண்டுபிடித்தார். அந்தச் சமயத்தில் பெரும் கண்டுபிடிப்பாகக் கருதப்பட்ட தொலைக்காட்சியை முன்வைத்து இந்தக் காப்பிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வகை காப்பிக்கும் ரசிகர்கள் ஏராளம்.
ஈப்போ காப்பி
கிழக்கு மலேசியா குறிப்பாக சபா மாநிலத்தில் உள்ள தெனோட் அம்மாநிலத்தின் காப்பி தலைநகராகக் கருதப்படுகிறது. இங்கு காப்பி பயிரிடும் நிறுவனங்களுள் ஒன்றான ஈப்போ காப்பி இன்னும் விறகு அடுப்பைப் பயன்படுத்தி பாரம்பரிய முறையில் காப்பி தயாரிக்கின்றனர். 1960ஆம் ஆண்டு யோங் லுன் ஊன் என்பவரால் இந்த வகை காப்பி கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம் சொந்தமாக காப்பி தயாரிப்பு தொழிற்சாலையையும் வைத்துள்ளது. இந்த நகருக்கு வரும் வாடிக்கையாளர்கள் இந்த வகை காப்பியை ருசிக்கலாம்.
ஹோல்டவுன் வைட் காப்பி
Oldtown White Coffee
நவீன காப்பி தோற்றுவிப்பை அடுத்து உள்நாட்டு காப்பி நிறுவனங்களும் இத்துறையில் ஈடுபடத் தொடங்கின. சில நிறுவனங்கள் அனைத்துலக ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளன. உதாரணத்திற்கு இந்த ஹோல்டவுன் வைட் காப்பி நவீன முறையில் பல கிளைகளைக் கொண்டிருந்தாலும் பாரம்பரிய முறையிலான காப்பி வகைகளை அவர்கள் இன்னும் வழங்குகின்றனர். நாடு தழுவிய அளவில் 200 கிளைகளை இக்குழுமம் கொண்டுள்ள. து ஹாங்காங் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளிலும் இக்கிளை விரிவாக்கம் கண்டுள்ளது.
பாப்பாரிச்
PappaRich
அதேபோல் 2006ஆம் ஆண்டு உள்நாட்டு காப்பி விற்பனைத் துறையில் அறிமுகமான பாப்பாரிச் குழுமம் தற்போது உள்நாடு மட்டுமல்லாது மூன்று கண்டங்கள் வரை அதன் விற்பனையை விரிவுபடுத்தியுள்ளது. இந்தக் கிளைகளிலும் தனிச்சுவைமிக்க காப்பி வகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதுவும் பாரம்பரிய முறையில் இந்தக் காப்பி வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
இதுபோல் நம் நாட்டில் San Francisco Coffee, Starbucks and Coffee Bean & Tea Leaf (CBTL) போன்ற பல காப்பி கடைகளும் காஃபேகளும் உள்ளன. இவை அனைத்தும் அனைத்துலக ரீதியில் நவீன முறையில் இருந்து பாரம்பரியச் சுவையைத் தரத் தவறுவதில்லை.