WCE விரைவுச்சாலையில் இரு கார்கள் மோதிய விபத்தில் இருவர் பலி..!

சித்தியவான்:

இன்று காலை மேற்கு கடற்கரை விரைவுச்சாலையின் (WCE) வடக்கு நோக்கி 208.6 ஆவது கிலோமீட்டரில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார், மற்றறொருவர் காயமின்றி உயிர் தப்பினர்.

காலை 7.30 மணியளவில் நடந்த விபத்தில், மூன்று பேர் பயணம் செய்த தோயோத்தா வியோஸ் கார் சறுக்கிச் சுழன்று, பின்னால் வந்த புரோத்தோன் சாகா கார் மீது மோதிய பின், சாலைத்தடுப்பின் மீது ஏறியது.

இதன்போது தோயோத்தா வியோஸ் காரில் பயணஞ் செய்த ஒரு பயணி காரில் இருந்து தூக்கி எறியப்பட்டு, சாலைதடுப்பு பள்ளத்தில் விழுந்தார் என்றும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் சித்தியவான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், முகமட் அசிசி ஜகாரியா கூறினார்.

குறித்த சம்பவம் தொடர்பில், இன்று காலை 7.35 மணிக்கு சிதியவான் சித்தியவான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்துக்கு அவசர அழைப்பு வந்தது.

“அதனடிப்படையில் தமது குழுவினர் அங்கு விரைந்தபோது, சம்பந்தப்பட்ட காரின் ஓட்டுநரும் மற்றொரு பயணியும் காரில் சிக்கிக்கொண்டிருந்தனர். தீயணைப்புத் துறையினர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இருவரையும் வெளியே அகற்றினர்.

காரில் சிக்கியிருந்த பயணி இறந்தது உறுதி செய்யப்பட்டது, அதே நேரத்தில் ஓட்டுநர் காயம் அடைந்தார்,” என்று அவர் கூறினார்.

மேலும் புரோத்தோன் சாகாவை ஓட்டியவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீ மாஞ்சாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், இறந்த இருவரின் உடல்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் முகமட் அஸிஸி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here