ஜார்ஜ்டவுன்:
காணாமல் போன முதியவரின் உடல் பினாங் ஆற்றில் மிதந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டது.
72 வயதான காங் தான் போக் ஹீ என்ற முதியவரின் உடல் மூன்று மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் அவர்கள் 999 ஐ தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்தனர் என்று வடகிழக்கு மாவட்ட காவல்துறை பதில் தலைவர், கண்காணிப்பாளர் வி சரவணன் கூறினார்.
இன்று காலை 10.06 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர்.
“இறந்தவர் பட்டர்வொர்த்தை முகவரியாகக் கொண்ட ஒரு சங்கத்தால் நடத்தப்படும் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வசிக்கிறார், இவர் நேற்று காலை 9 மணியளவில் காணாமல் போனார் என அறிய முடிகிறது.
பாதிக்கப்பட்டவரின் உடலைப் பரிசோதித்ததில், அவரது இறப்பில் குற்றச் செயல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று கண்டறியப்பட்டதுடன் அவரது உடல் பினாங்கு மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது என்றும் சரவணன் கூறினார்.