அம்பாங் :
சமீப காலமாக சீனாவில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா இருப்பதால், அங்கு நடக்கும் கோவிட்-19 தொற்றுநோயின் அதிகரிப்பு, மலேசியா போன்ற வர்த்தக கூட்டாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நாம் கண்காணிக்க வேண்டும் என்றார்.
இப்பெருந்தொற்றின் பரவலினால் உலகளாவிய ரீதியில் பொருளாதாரத்தில் பெரும் சவால்கள் நிறைந்திருப்பதோடு, பொருட்களின் விலை உயர்வு, சிறு, நடுத்தர தொழிற்துறையினர் உட்பட அனைத்து வகுப்பு மக்களுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பண்டான் நாடாளுமன்றத்தின் மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற ஒரு நிகழ்ச்சியில் நன்கொடைகளை வழங்கியப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.









