சீனாவில் காணப்படும் மாறுபாடுகள் கொண்ட கோவிட்-19 வைரஸ் வகைகள் மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளன -டாக்டர் சாலிஹா

பெட்டாலிங் ஜெயா:

சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட்-19 வகைகளும் துணை வகைகளும் மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இது உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவலின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டதாக  அவர் கூறினார்.

மேலும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு, அவ்வைரஸ் தொற்றினால் ஏற்படும் கடுமையான அறிகுறிகள் குறைவாக வருவதாக அறியமுடிகிறது.

எனவே மக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறும், அதையும் தாண்டி கோவிட்-19 வைரஸ் தொற்றுக் கண்டவர்கள் அலட்சியம் காட்டாது, அவற்றுக்கான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள உடனடியாக மருத்துவரை நாடுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here