பாசீர் மாஸ்:
தற்போதைய வடகிழக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய வெள்ளத்தின் இரண்டாவது அலையைச் சமாளிக்க, மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் கிளாந்தான் பிரிவு தயார் நிலையில் உள்ளதாக, கிளாந்தான் குடிமைத் தற்காப்புப் படையின் இயக்குநர், கோல் (PA) முகமட் அட்சார் முஜாப் கூறினார்.
மறுபடியும் வெள்ளம் ஏற்பட்டால், தமது உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் கடமைகளைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை அவர் உறுதிச்செய்தார்.
“எங்களிடம் இப்போது 1,300 பணியாளர்கள் உள்ளனர் என்றும், வெள்ள அறிவிப்பை வெளியிட்டவுடன், அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளனர் என்றும் கூறினார்.