4 மாநிலங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பு

 சரவாக்கின் பல பகுதிகளில் இன்று தொடங்கி நாளை ஜனவரி 4 வரை தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று மதியம் 1.30 மணியளவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கூச்சிங், செரியன், சமரஹான், ஸ்ரீ அமான், பெடோங், சரிகேய், சிபு மற்றும் முக்கா ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபாவின் பல பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை நிலவும், சண்டகன் (தெலுபிட், கினாபாடங்கன் மற்றும் பெலூரன்) மற்றும் குடாட் ஆகியவை அடங்கும்.

இதே அறிக்கையில் ஜனவரி 6 முதல் இரண்டு நாட்களுக்கு கிளந்தான் மற்றும் தெரெங்கானுவிலும் இதேபோன்ற முன்னறிவிப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

கிளந்தான் பகுதிகளில் தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பச்சோக், மச்சாங், பாசீர் பூத்தே மற்றும் கோல க்ராய் ஆகியவை சம்பந்தப்பட்டிருப்பதாகவும், தெரெங்கானுவில் பெசுட், செட்டியூ, கோல நெரஸ் மற்றும் கோல தெரெங்கானு ஆகியவை அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here