Big Blue வாடகைக்கார் சேவை நிறுவனருக்கு எதிராக மோசடிக் குற்றச்சாட்டு

மலாக்கா:

ஆடம்பர கார் விற்பனை மற்றும் “டத்தோ” பட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி, Big Blue வாடகைக்கார் சேவை நிறுவனர் ஷம்சுபஹ்ரின் இஸ்மாயிலுக்கு எதிராக, இன்று ஆயிர் கேரோ அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

57 வயதான அந்த நபர் இரண்டு குற்றச்சாட்டுகளையும் நீதிபதி தர்மாஃபிக்ரி அபு ஆடாம் முன்நிலையில் மறுத்து, விசாரணை கோரினார்.

முதல் குற்றச்சாட்டின்படி, மலாக்கா அம்னோ தலைவரான  டத்தோஸ்ரீ அப்துல் ரௌஃப் யூசோ, 62 என்பவரை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதாவது RM180,000 விலையுள்ள VVP 7 என்ற பதிவு எண் கொண்ட 2019 Toyota Alphard காரை RM95,000க்கு விற்றது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டது.

இக்குற்றம் டிசம்பர் 7, 2021 அன்று, மலாக்கா மாநில சட்டசபை அலுவலகம், 2வது மாடி, பிளாக் லக்சமானா, ஸ்ரீ நெகிரியில் இந்தக் குற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கும் தண்டனைச் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

அடுத்து, 1981 ஆம் ஆண்டு சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாட்டைத் தடுத்தல்) சட்டத்தின் பிரிவு 3(1)(a) இன் கீழ், அதே இடத்தில் முதல்வரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி “டத்தோ” பட்டத்தையும் மரியாதையையும் தனது தனிப்பட்ட இலாபத்திற்காக பயன்படுத்தியதாக ஷம்சுபஹ்ரின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக RM500,000 அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்த வழக்கின் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் நீதிமன்றம் RM30,000 ஜாமீன் வழங்கியது மேலும் அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது, அத்துடன் ஒவ்வொரு மாதமும் காவல் நிலையத்தில் சென்று தனது இருப்பை உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டது.

இவ்வழக்கில் ஆவணங்களை சமர்ப்பிக்க பிப்ரவரி 7 ஆம் தேதியை நீதிமன்றம் குறிப்பிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here