இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில், கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஆடவர் நீரில் மூழ்கி மரணம்

சபாக் பெர்னாம்:

சபாக் பெர்னாம் சாலைப் போக்குவரத்துத் துறைக்கு அருகே, சுங்கை பெசார் செல்லும் சபாக் பெர்னாம் நெடுஞ்சாலையில் இரு கார்கள் மோதிய விபத்தில், காருடன் பள்ளத்தில் வீழ்ந்த ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்று, சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர், டத்தோ நோராசாம் காமிஸ் கூறினார்.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும், சபாக் பெர்னாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஆறு உறுப்பினர்கள் மற்றும் இயந்திரங்கள் இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.

“ஆரம்பத் தகவல்களின்படி, விபத்துக்குள்ளான இரு கார்களில், 30 வயதான பாதிக்கப்பட்டவர் Proton Preve காரை ஓட்டிவந்தார், அதே நேரத்தில் மற்றைய Proton Saga கார் 30 வயதான ஒரு கணவன் மற்றும் மனைவி பயணஞ் செய்தனர்” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

குறித்த இருக்கார்களும் மோதிக்கொண்டதில், Proton Preve கார் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்தது என்று நோராசாம் கூறினார்.

அவரது கூற்றுப்படி, தீயணைப்பு படையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே, பாதிக்கப்பட்ட அனைவரும் பொதுமக்களால் மீட்கப்பட்டனர். இருப்பினும் “புரோட்டான் ப்ரீவ் ஓட்டுநர் இறந்ததை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது . இறந்தவராது சடலம் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

“கணவன் மற்றும் மனைவிக்கு காயம் ஏற்படாத போதிலும், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தெங்கு அம்புவான் ஜெமா மருத்துவமனைக்கு (HTAJ) சபாக் பெர்னாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here