அரை நிர்வாணத்தில் சிறுமியின் சடலம் வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 14 வயது சிறுவன் கைது

சபா, தவாவில் உள்ள பாமாயில் தோட்டத்தில்  கடந்த புதன் கிழமை சிறுமியின் அரை நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். 15 வயது சிறுமியின் சடலம் வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டதாக மாவட்ட காவல்துறை தலைவர் ஜாஸ்மின் ஹுசின் தெரிவித்தார். அச்சிறுமியின் கழுத்து நெரிக்கபட்டதோடு கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்தார்.

அவளுடைய உடலில் மற்ற காயங்கள் இருந்தன, அவளுடைய தலையின் இடது பக்கத்தில்  ஒரு கடினமான பொருளால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. அவரது கைகள் மற்றும் கழுத்தும் கருப்பு நாடாவால் கட்டப்பட்டிருந்தன என்று ஹரியான் மெட்ரோவின் அறிக்கையின்படி அறிய முடிகிறது.

சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட நபரும் ஒரே சுற்றுவட்டாரத்தில் வசிப்பதாகவும் அவர்கள் தோட்டத்திலுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களின் பிள்ளைகள் எனவும் மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஜாஸ்மின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here