இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு

இந்தோனேசியாவில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் டனிம்பர் தீவு மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நேற்று இரவு சரியாக 10.47 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

இதனால், இரவில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகள் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here