கடந்த 15வது பொதுத் தேர்தலில் (GE15) அம்னோ சந்தித்த தோல்விக்குப் பிறகு, வரவிருக்கும் கட்சித் தேர்தலில் தலைவர் பதவி உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான போட்டி கட்சிக்குள்ளேயே பிளவை ஏற்படுத்தக்கூடும் என்று, அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
அம்னோவின் தற்போதைய நிலவரப்படி, “கட்சியின் தலைவர் பதவி மற்றும் பிற பதவிகளுக்கு போட்டியிடாமல் இருப்பது நல்லது, ஏனெனில் ஏதாவது செய்யப்போய், அது கட்சிக்குள் ஒரு விரிசலை ஏற்படுத்தக்கூடும்,” என்று அவர் கட்சியின் மகளிர், புத்திரி மற்றும் இளைஞர் அணிகளை ஒரே நேரத்தில் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“யார் போட்டியிட விரும்பினாலும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நான் (துணை தலைவர் பதவியை) தர்காப்பேன், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை,” என்றும் அவர் கூறினார்.