கடந்த ஜனவரி 9ஆம் தேதி காணாமல் போன MV DAI CAT 06 என்ற சரக்குக் கப்பலைத் தேடும் பணி தொடர்கிறது என்று மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (MMEA) தெரிவித்துள்ளது.
கப்பல் காணாமல் போனதற்கு பின்னணியில் ஏதேனும் குற்றச் செயல்கள் உள்ளதா என விசாரணை நடத்தி வருவதாக அதன் தலைமை இயக்குனர் ஜெனரல், கடல்சார் அட்மிரல் டத்தோ முகமட் ஜூபில் மாட் சோம் தெரிவித்தார்.
இந்தோனேசியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் மூலம் நதுனா தீவுகளின் கடற்பகுதியில் இந்த தேடுதல் பணி தொடர்கிறது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குறித்த கப்பல் ஜனவரி 9ஆம் தேதி, ஐந்து மாலுமிகளுடன் உலோகக் குழாய்களை ஏற்றிச் சென்றபோது காணாமல் போனதாகவும் , இறுதியாக ஜோகூர் கடல் எல்லையில் இருந்து 0.2 கடல் மைல் தொலைவில் உள்ள இந்தோனேசிய கடல் பகுதியில் இருந்தது என்றும் ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.