தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, தாயார் வேறொரு ஆடவருடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில், தனது தாயை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த அவரது மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்தார்.
நேற்று நண்பகல் 1 மணியளவில் நடந்த சம்பவத்தில், சந்தேக நபர் தாமான் பெரிண்டஸ்ட்ரியான் பூச்சோங் உத்தாமாவில் உள்ள தனது தாயின் கடைக்குச் சென்று, அவரது முகத்தில் கோப்பை எறிந்து அவரை தாக்கியத்துடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரைத் திட்டியதாக, அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், போலீசார் சந்தேக நபரை அன்றைய தினம் இரவு 11.30 மணியளவில் கைது செய்தனர் என்றார்.
“குறித்த சந்தேக நபரிடம் மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையின் முடிவில், அவர் மெத்தாம்பேட்டமைன் இருப்பது கண்டறியப்பட்டது, மேலும் அவருக்கு 15 முந்தைய குற்றப் பதிவுகள் இருந்தது என்றும் , சந்தேக நபர் வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் கூறினார்.