ஐரோப்பிய ஒன்றியம் நெருக்குதல் கொடுத்தால் ஐரோப்பாவிற்கான செம்பனை எண்ணெய் ஏற்றுமதியை மலேசியா நிறுத்தலாம்- துணைப் பிரதமர்

வியாபார நோக்கத்திற்காக காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்கான புதிய முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

வர்த்தகக் குழுவின் புதிய காடழிப்பு விதிமுறைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஐரோப்பாவுக்குச் செம்பனை எண்ணெய்யை ஏற்றுமதியை மலேசியா நிறுத்தலாம் என துணைப் பிரதமரும், தோட்டத்துறை மற்றும் மூலப் பொருள் அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து செம்பனை எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு நெருக்குதல் கொடுத்து வந்தால், ஐரோப்பாவுக்குச் செம்பனை எண்ணெய்யை ஏற்றுமதி செய்வதை நிறுத்துவது குறித்து ஆராயப்படும் என்று, அவர் நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 12) நடந்த செம்பனை எண்ணெய் பொருளாதார ஆய்வுக் கருத்தரங்கு 2023 இல் உரையாற்றும்போது கூறினார்.

செம்பனை எண்ணெய் உட்பட குறிப்பிட்ட சில மூலப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. செம்பனை எண்ணெய் தொழில்துறை மற்றும் அதன் பொருட்களுக்கு எதிரான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை தடுத்து நிறுத்துவதிலும், அதன் வியாபார தடைகளை இல்லது ஒழிப்பதிலும் மலேசியா இந்தோனேசியாவிற்கு ஒத்துழைக்கும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here