வலிப்பு ஏற்பட்டு மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் ஆடவர் ஒருவர் மரணம்

ஜாலான் கோர் செம்பேடாக்-யான் (Jalan Guar Chempedak-Yan) சாலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டதாகக் நம்பப்படும் ஆடவர், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் யான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் ஷாஹனாஸ் அக்தர் ஹாஜி கூறுகையில், நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 38 வயதுடைய நபர் பலத்த காயங்களுக்கு உள்ளானதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

“பாதிக்கப்பட்டவர் யான் திசையில் இருந்து கோர் செம்பேடாக் நோக்கி வந்ததாக நம்பப்படும் SYM E Bonus 110 வகை மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது என்றார்.

“சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​​​திடீரென்று பாதிக்கப்பட்டவருக்கு வலிப்பு ஏற்பட்டு, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலதுபுறத்தில் கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது. “விபத்தின் விளைவாக, பாதிக்கப்பட்டவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே இறந்தார்,” என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக யான் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டதாக ஷானாஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here