பாண்டான் இண்டா குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தம்பதியினர் மீது நாளை குற்றஞ்சாட்டப்படும்

கோலாலம்பூர்: டிசம்பர் 29 அன்று அம்பாங்க பாண்டான் இண்டாவில் உள்ள உணவக ஊழியரின் உயிரைக் கொன்ற குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் திருமணமான தம்பதியினர் மீது நாளை அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

இன்று காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஃபாரூக் எஷாக்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கெடாவின் செர்டாங்கைச் சேர்ந்த தம்பதியினர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் கொலைக் குற்றம் சாட்டப்படும் என்று அவர் கூறினார். இரவு 8.55 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 28 வயதுடைய ஆண் பணியாளராக இருந்தவர், அவரது கார் போனட்டில் கிடந்த பார்சல் (பொதி) வெடித்ததில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்கப்பட்டிக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here