இதுவரை 6,000 இல்லத்தரசிகள் மட்டுமே சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் சந்தாதாரர்களாக உள்ளனர் – மனிதவள அமைச்சர்

e-Kasih இல் பதிவு செய்யாத 6,000 இல்லத்தரசிகள் மட்டுமே சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் (SKSSR) சந்தாதாரர்களாக உள்ளனர் என்று மனிதவளத் துறை அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்தார்.

“நாடு முழுவதுமுள்ள 55 வயது வரை உள்ள 30 இலட்சம் இல்லத்தரசிகள் இந்தத் திட்டத்தில் பங்களிக்கத் தகுதியுடையவர்கள்.

இருப்பினும் இந்த திட்டம் தொடர்பான விழிப்புணர்வை கொண்டுவந்து, அவர்களை ஊக்குவிப்பது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும், இதனால் அதிகமான இல்லத்தரசிகள் பயனடைவார்கள்,” என்று, அவர் இன்று இங்கு காப்பீடு செய்யப்பட்ட இல்லத்தரசிகளின் (SRB) அடுத்த உறவினர்களுக்கு, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உள்ள சலுகைகளை வழங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here