மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனை இன்று இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.
நண்பகல் சுமார் 2.20 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பில் மலேசிய வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் கலந்து கொண்டார்.
மேலும் மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வானு கோபால மேனன், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் நிரந்தரச் செயலாளர் ஆல்பர்ட் சுவா மற்றும் மலேசிய வெளியுறவு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அம்ரான் முகமட் சின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் “மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே நீண்டகால பரஸ்பர உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக ,” அரச குடும்ப பொறுப்பாளர் டத்தோ ஜஹாரி முகமட் அரிஃபின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் நேற்று தொடங்கி 4 நாட்களுக்கு மலேசியாவிற்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.