சீனப் புத்தாண்டை முன்னிட்டு கூட்டரசு மற்றும் மாநில சாலைகளில் வேக வரம்பு மணிக்கு 10Km ஆல் குறைக்கப்படுகிறது

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாடு முழுவதுமுள்ள கூட்டரசு மற்றும் மாநில சாலைகளின் வேக வரம்பு 10kph ஆல் தற்காலிகமாக குறைக்கப்படும் என்று, பொதுப் பணிகள் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

அதனடிப்படையில் கூட்டரசு சாலைகளில் மணிக்கு 80Km ஆகவும், மாநில சாலைகளில் மணிக்கு 70 Km ஆகவும் வேகக்கட்டுப்பாடு இருக்கும் என்று அவர் கூறினார்.

இந்த வேக வரம்பு குறைப்பு நாளை புதன்கிழமை (ஜனவரி 18) முதல் ஜனவரி 27 வரை அமலிலிருக்கும்.

“இந்தக் வேகக் குறைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் தற்போதைய வேக வரம்பு சமிக்ஞை அறிகுறிகளில் தற்காலிக மாற்றங்கள் இருக்கும்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here