பினாங்கு மாநில சட்டசபை, சபாநாயகருக்கு எதிராக நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி

பினாங்கு மாநில சட்டமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ லா சூ கியாங்கிற்கு எதிராக 2020 அக்டோபரில், தங்கள் சட்டமன்ற இருக்கைகளை காலி செய்யுமாறு வழங்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக நான்கு பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடுத்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

சுங்கை ஆச்சே சட்டமன்ற உறுப்பினர் சுல்கிப்லி இப்ராஹிம், டாக்டர் அஃபிஃப் பஹார்டின் (செபரங் ஜெயா), காலிக் மெஹ்தாப் முகமட் இஷாக் (பெர்டாம்) மற்றும் சோல்கிப்ளி முகமட் லாசிம் (டெல்லோக் பகாங்) ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை நீதித்துறை ஆணையர் அஜிசான் முகமட் அர்ஷாத் தள்ளுபடி செய்தார்.

“மாநில அரசியலமைப்பின் பிரிவு 14A செல்லுபடியாகும் என்று கூட்டரசு நீதிமன்றம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது, எனவே அந்த முடிவுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது” என்று அவர் இன்று தீர்ப்பு வழங்கும்போது கூறினார்.

மேலும், தங்களுக்கு எதிரான தீர்மானம் தவறானது என்ற அவர்களின் விண்ணப்பங்களைப் பொறுத்தவரை, அவை மாநில சட்டமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் நீதிமன்றத்தால் இந்த விஷயத்தை முடிவு செய்ய முடியாது என்று அஜிசான் கூறினார்.

மாநில சட்டமன்ற கூட்டத்தின் போது வாதிகளின் (வழக்கு தொடுநர்) இருக்கைகளை காலி செய்யும்படி கோரும் தீர்மானம் விவாதிப்பதைத் தடுக்க, பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here