‘Op Selamat’ நடவடிக்கை வாகனமோட்டிகளின் இடையூறுக்காக அல்ல: சாலை விபத்துக்களை தவிர்க்கவே என்கிறது காவல்துறை

‘Op Selamat’ நடவடிக்கை பண்டிகைக் காலங்களில் சாலைப் பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதற்காக நடத்தப்படுவதில்லை, மாறாக சீரான போக்குவரத்தை உறுதிப்படுத்தவும் சாலை விபத்துகளைக் குறைக்கவும் நடத்தப்படுகிறது என்று, புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ மாட் காசிம் கரீம் கூறினார்.

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து தொடங்கப்பட்ட Op Selamat 19, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்கள் மற்றும் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் முக்கிய கவனம் செலுத்தும் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுப்பது அவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்று கூறி உள்ளூர் செய்தித்தாள் ஒன்று நேற்று வெளியிட்ட “பெருநாள் காலங்களில் சாலைப் பயனர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்” என்ற கட்டுரைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் அந்த அறிக்கையில் இவ்வாறு கூறினார்.

மேலும் சாலைப்பயணர்கள் வரிசைகளை வெட்டாமல், அவசர பாதையை தவறாக பயன்படுத்தாமல், போக்குவரத்திற்கு இடையூறாக அனைத்து போக்குவரத்து விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

“ஜனவரி 18 முதல் 27 வரையில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கு சாலையைப் பயன்படுத்துபவர்களின் வசதி, சீரான போக்குவரத்தையும் உறுதி செய்ய அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் ” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here