குளுவாங்கில் இரண்டு வாகனங்கள் மோதியதில் 11 வயது சிறுவர்கள் இருவர் உட்பட ஐவர் பலி- அறுவர் காயம்

இன்று பிற்பகல் 4.40 மணியளவில் ஜாலான் மெர்சிங்-குளுவாங்கின் பத்து 13 இல், Honda Stream வாகனமும் ஒரு Perodua Myvi வகை காரும் மோதிய விபத்தில், 11 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் இறந்ததாக குளுவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த மூத்த தீயணைப்பு அதிகாரி II, முகமட் ஷம்சுல் அம்ரி முகமட் ஷஹாப் கூறினார்.

இந்த விபத்தில் மஸ்ரினா கஹ்தர், 21; முஹமட் ஜர்பா நோரமின், 16; முகமட் சியாகிர் நோரமின், 11; முகமட் அஷ்ரப் ரதிக் அப்துல்லா, 11; மற்றும் முஹமட் ஆதில் அப்துல் காதிர், 23 என்ற ஐவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

“இறந்தவர்களது சடலங்கள் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இந்த விபத்தில் Perodua Myvi யில் இருந்த மூன்று பேர் மற்றும் Honda Stream இல் இருந்த மூன்று பேர் என மொத்தம் ஆறு பேர் காயம் அடைந்ததாகவும், அனைவரும் மேல் சிகிச்சைக்காக Enche’ Besar Hajjah Khalsom Hospital மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here