சுவீடனில் துருக்கியே தூதரகத்திற்கு வெளியே அல்-குர்ஆன் எரிக்கப்பட்ட செயலை அம்னோ வன்மையாகக் கண்டிக்கிறது

சமீபத்தில் சுவீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கியே தூதரகத்திற்கு வெளியே சுவீடன்-டானிஷ் தீவிர வலதுசாரி கட்சியின் அரசியல்வாதியான ராஸ்மஸ் பலுடான் புனித நூலான அல்-குர்ஆனை எரித்த செயலுக்கு அம்னோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பலுடானின் இந்த இழிவான செயல், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான மிகத் தெளிவான ஒரு ஆத்திரமூட்டக் கூடிய செயல் என்றும் சமயத்தை அவமரியாதை செய்யும் காட்டுமிராண்டித்தனம் என்றும் அம்னோ தலைவர், டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

“இஸ்லாத்தின் மீதான இந்த பயங்கரமான வெறுப்புக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சுவீடன் அரசாங்கத்தை அம்னோ வலியுறுத்துகிறது” என்று துணைப் பிரதமராகவும் இருக்கும் அஹ்மட் ஜாஹிட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here