முன்னாள் நிதியமைச்சரின் மனைவி காலமானார்

முன்னாள் நிதியமைச்சர் டியாஃம் ஜைனுதீனின் மனைவி மஹானி இட்ரிஸ் நேற்று இரவு காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை.

அஸ்ட்ரோ அவானியின் கூற்றுப்படி,  மாமி (மஹானி)  கடவுளிடம் அமைதியாகத் திரும்பினார் என்பதை நாங்கள் கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறினார்.

அவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை 10 மணிக்கு மஸ்ஜித் கம்போங் பாருவில் நடத்தப்படும் என்றும் பின்னர் செரி கெம்பாங்கனில் உள்ள சுராவ் ஹிதாயத்தில் பிரார்த்தனை நடைபெறும் என்றும் அறியப்படுகிறது. அவரது நல்லுடல் புக்கிட் கியாரா இஸ்லாமிய கல்லறையில்  அடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here