RM64 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள கடத்தல் பொருட்கள், விலங்குகள் பறிமுதல் – 15 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 88 பேர் கைது

ஜனவரி 1 முதல் 20 வரை, நாடு முழுவதும் மேற்கொண்ட 35 சோதனைகளில் RM64 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு கடத்தல் பொருட்கள் மற்றும் கடத்தப்பட்ட வனவிலங்குகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டதோடு, 15 வெளிநாட்டினர் மற்றும் 73 உள்ளூர் நபர்கள் என மொத்தம் 88 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வனவிலங்கு குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுப் பிரிவான உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை (JKDNKA) மூலம் இந்த சோதனைகள் அனைத்தும் நடத்தப்பட்டதாக தேசிய காவல்படை (PDRM) செயலாளர், டத்தோ நூர்சியா முகமட் சாதுடின் தெரிவித்தார்.

வனவிலங்கு குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவான உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை மூலம் இதுபோன்ற கடத்தல் குற்றங்கள் மற்றும் பல்வேறு குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் ஏனைய அமலாக்க அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை காவல்துறை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here