புரூணைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், புரூணை நாட்டுச் சுல்தான் சுல்தான் ஹாசனல் போல்கியாவை இன்று இஸ்தானா நூருல் இமானில் இன்று சந்தித்தார்.
பிரதமர் தனது துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுடன் காலை 11.05 மணிக்கு அரண்மனைக்கு வந்தடைந்தார்.
இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடந்ததாகவும், இதன்போது மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் (MIDA) புரூணை முதலீட்டு நிறுவனத்திற்கும் (BIA) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பரில் மலேசியாவின் 10வது பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொள்ளும் இரண்டாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.