தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலைக்கு பிப்ரவரி 4 முதல் 6 வரை 24 மணி நேர KTM ரயில் சேவை

தைப்பூசத்தை முன்னிட்டு எதிர்வரும் பிப்ரவரி 4 முதல் 6 ஆம் தேதி வரை, 24 மணி நேரமும் பத்துமலைக்கு இடைவிடாத KTM ரயில் சேவைகளை வழங்குகிறது.

இந்த கூடுதல் ரயில் சேவைகள் Sungai Gadut- Batu Caves மற்றும் Pelabuhan Klang- Batu Caves ஆகிய வழித்தடங்களில் வாழங்கப்படும் என்றும் அதே காலகட்டத்தில் அவை 24 மணிநேரமும் செயல்படும் என்றும் KTMB நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முகமட் ராணி ஹிஷாம் சம்சுடின் தெரிவித்தார்.

தைப்பூசப் பண்டிகைக் காலத்தில் சுமார் 182,000 பயணிகள் KTM ரயில் சேவையைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

“பிப். 4 முதல் 6 வரை வழக்கமாக பத்துமலைக்கு செல்லும் ரயில்கள் அதன் கால அட்டவணையைப் பின்பற்றும், அதே நேரத்தில் கூடுதலான ரயில்கள் திட்டமிடப்பட்ட ரயில் இயக்க நேரம் முடிந்த பிறகு, ஒரு மணி நேர இடைவெளியுடன் சேவையில் ஈடுபடும்” என்று அவர் இன்று (ஜனவரி 26) நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும் இந்த செயல்பாட்டை உறுதிச் செய்வதற்காக சுமார் 300 KTM பணியாளர்கள் பணியில் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here