வேட்டைக்கு சென்ற இடத்தில் தனது எஜமானை சுட்ட நாய் -அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை விட அவர்கள் தங்களது பாதுகாப்புக்காக வைத்திருக்கும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகம்.

அந்நாட்டில், துப்பாக்கி சூடு சம்பவங்கள் சமீப காலங்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. பிறந்த சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரிடமும், துப்பாக்கி கலாசராம் அதிகரித்து உள்ளது. இதனால், துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடு விதிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க செல்ல பிராணியுடன் வேட்டைக்கு சென்ற இடத்தில் தனது வளர்ப்பு நாயால் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. இதுபற்றி சம்னர் கவுன்டி ஷெரீப் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், வாகனம் ஒன்றில் தனது செல்ல நாயுடன், அதன் உரிமையாளர் காட்டுக்கு வேட்டையாட துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அவர் முன்பக்கம் இருக்கையில் அமர்ந்து உள்ளார். பின்பகுதியில் சீட்டில் இருந்த துப்பாக்கியை, உடன் வந்த வளர்ப்பு நாய் திடீரென மிதித்து உள்ளது. இதில், துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து முன்பக்கம் இருந்த எஜமானரை சுட்டுள்ளது.

அவரது முதுகு பக்கத்தில் துப்பாக்கி குண்டு துளைத்து உள்ளது. இதில், அவர் மயங்கி சரிந்தார். அதிர்ஷ்டவசமாக, கில்லியன் 911ஐ அழைத்து அவருக்குத் தேவையான மருத்துவ உதவியைப் பெற முடிந்தது.

அவர் தற்போது டெக்சாஸில் உள்ள எல் பாசோ பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். கில்லிகன், தன்னால் அழைப்பைச் செய்ய முடியாவிட்டால், அவர் விபத்தில் உயிர் பிழைத்திருக்க மாட்டார் என்று கூறினார்.

இதுபற்றி கன்சாஸ் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், 2021-ம் ஆண்டில் தற்செயலாக துப்பாக்கி சுட்டதில் சிக்கி 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here