“புனித ரமலான் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களுக்கு முன்னர் சிலாங்கூர் மாநில சட்டசபை கலைக்கப்படாது” என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மிக விரைவாகவோ அல்லது நோன்புப் பெருநாளுக்கு முன்பாகவோ சிலாங்கூர் சட்டமன்றம் நிச்சயமாக கலைக்கப்படாது என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு நடுப்பகுதியுடன் காலாவதியாகும் நாட்டின் ஆறு மாநிலங்களின் சட்டமன்றங்களான கிளாந்தான், நெகிரி செம்பிலான், கெடா, பினாங்கு, திரெங்கானு மற்றும் சிலாங்கூர் என்பன அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.