வரும் திங்கட்கிழமை வரை நான்கு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

எதிர்வரும் திங்கட்கிழமை வரை கிளாந்தான், திரெங்கானு, பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நண்பகல் 1 மணிக்கு, மலேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையின்படி, திரெங்கானு, கிளாந்தானில் உள்ள தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, பச்சோக் மற்றும் பாசீர் பூத்தே ஆகிய இடங்களில் கடுமையான கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர பகாங்கின், குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய பகுதிகளில் கடுமையான கனமழை பெய்யும் என்றும், ஜோகூரில், சிகாமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளும் இந்த வானிலையை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஜெலி, தானா மேரா, மாச்சாங் மற்றும் கிளாந்தானில் உள்ள கோலக் கிராய் ஆகிய இடங்களிலும் தொடர் மழை பெய்யும் என்றும்; பகாங்கில் ஜெரான்துட் மற்றும் மாரான்; மற்றும் ஜோகூரில் உள்ள தாங்காக், மூவார், பத்து பஹாட் மற்றும் பொந்தியான் ஆகிய இடங்களுக்கும் இந்த தொடர்மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here