Op Selamat 19 நடவடிக்கை: நேற்று மட்டும் 1,389 விபத்துக்கள் பதிவு

சீனப் புத்தாண்டுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையான Op Selamat 19 நடவடிக்கையின் கடைசி நாளான நேற்று, நாடு முழுவதும் மொத்தம் 1,389 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்க இயக்குனர், டத்தோஸ்ரீ மாட் காசிம் கரீம் தெரிவித்தார்.

இந்த விபத்தில் மொத்தம் 1,711 வாகனங்கள் விபத்துக்குள்ளானது, அதில் அதிகபட்சமாக 1,140 கார்களை உள்ளடங்கிய விபத்துக்கள் பதிவாகியுள்ளன, இதைத் தொடர்ந்து 250 சம்பவங்கள் மோட்டார் சைக்கிள்களை உட்படுத்தியவை என்றும், நான்கு சக்கர வாகனங்கள் (211), லோரிகள் (86), வேன்கள் (15), பஸ்கள் (7) மற்றும் ஒரு டிராக்டர் மற்றும் சைக்கிள் சம்பந்தப்பட்ட தலா ஒரு சம்பவம் ஆகியவை நடந்தன,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

இந்த நாடு தழுவிய சாலைப் பாதுகாப்பு நடவடிக்கை கடந்த ஜனவரி 18 முதல் 10 நாட்களுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here