காப்பீடு பெறுவதற்காக தவறான புகாரை அளித்த கார் உதிரிபாக விற்பனை உரிமையாளர் கைது

பெட்டாலிங் ஜெயா டத்தாரான் மெந்தாரியில் உள்ள தனது கடையை உடைத்து RM600,000 நஷ்டம் ஏற்படுத்தியதாக கார் பாகங்கள் கடை உரிமையாளர் ஒருவர் தவறான புகாரினை செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமிட் கூறுகையில், 39 வயதான அந்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1.09 மணிக்கு நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

புகாரின்படி எந்த உடைப்பு சம்பவமும் இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது என்றும், காப்பீட்டு கோரிக்கைக்காக அறிக்கை செய்ததை அந்த நபர் ஒப்புக்கொண்டார் என்றும் அவர் கூறினார். தண்டனைச் சட்டத்தின் 182ஆவது பிரிவின்படி போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்கள் நலனுக்காக தவறான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்றும் விசாரணைகளை நடத்துவதில் அதிகாரிகளை தவறாக வழிநடத்த வேண்டாம் என்றும் முகமது ஃபக்ருதீன் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here