சீர்திருத்த மையத்தில் இருந்து தப்பியோடிய கைதி மீண்டும் பிடிப்பட்டார்

மலாக்கா, ஜாசின் சீர்திருத்த மையத்தில் இருந்து தப்பியோடிய கைதி திங்கள்கிழமை (ஜனவரி 30) இரவு சுமார் 9 மணியளவில் அலோர் காஜா வட்டாரத்தில் பிடிபட்டார். 43 வயதுடைய சந்தேக நபரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 31) ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக ஜாசின் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏஎஸ்பி முகமட் ஃபட்சில் ஓத்மான் தெரிவித்தார்.

தண்டனைச் சட்டத்தின் 223 மற்றும் 224 பிரிவுகளின் கீழ் விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். முன்னதாக, ஜனவரி 24 ஆம் தேதி மதியம் 2.20 மணிக்கு ஆண் கைதி காணாமல் போனதை வார்டனால் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து போலீசார் அவரை தேடி வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here