அம்பாங் – ஸ்ரீ பெட்டாலிங் இலகு ரயில் வழித்தடத்தில் மேற்கொள்ளப்படும் பழுதுபார்க்கும் பணிகள் இரண்டு வாரங்களில் முடிக்கப்படும் – லோக்

பண்டாராயா இலகு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தை உள்ளடக்கிய, இலகு ரயில் போக்குவரத்து (LRT) சேவையின் வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரிசெய்யும் பணியின் முதல் கட்டம், இரண்டு வாரங்களில் தயாராகும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ ஃபூக் கூறினார்.

“இந்த பழுதுபார்க்கும் செயல்முறை குறுகிய மற்றும் நீண்ட கட்டம் என இரண்டு கட்டங்களை உள்ளடக்கியது என்றும், சேதமடைந்த மேம்பாலத்தின் கட்டமைப்பை பழுது பார்க்க நிறுவனம் ஒன்று நியமிக்கப்பட்டதாகவும், அதனுடன் பிராசாரானா மலேசியா பெர்ஹாட்டும் இணைந்து சேதத்தை சரிசெய்யும் என்றார்.

குறித்த வழித்தடம் பாதுகாப்பானதாக இருந்தால் மட்டுமே போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்றும், இந்த இரண்டு வார இலகு ரயில் போக்குவரத்து தடங்கலுக்கு தாம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் லோக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here