நடிக்க வாய்ப்பு தருவதாக இளம்பெண் பலாத்காரம் – சினிமா தயாரிப்பாளர் கைது

மலையாளத்தில் பல படங்களை தயாரித்து பிரபல பட அதிபராக இருப்பவர் மார்ட்டின் செபாஸ்டியன். இவர் மீது திருச்சூரை சேர்ந்த இளம் பெண் போலீசில் புகார் அளித்தார். அதில், “மார்ட்டின் செபாஸ்டியன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி எனக்கு 13 ஆண்டுகள் பாலியல் தொல்லை கொடுத்தார். திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து மும்பை, பெங்களூரு நகரங்களுக்கு அழைத்துச்சென்று என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்” என்று கூறியிருந்தார்.

புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மார்ட்டின் செபாஸ்டியன் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார். எர்ணாகுளம் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி இருந்தது.

இதையடுத்து மார்ட்டின் செபாஸ்டியன் போலீசில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் மார்ட்டின் செபாஸ்டியனை போலீசார் கைது செய்தனர். இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here