கூலாயில் உள்ள ஜாலான் பாரிட் பாஞ்சாங்கில் நேற்று முன்தினம், போதையில் ஒருவர் ஓட்டிச் சென்றதாகக் கருதப்படும் லோரி மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
ஆயிர் பெம்பானில் இருந்து செடெனாக் சுங்கச்சாவடியை நோக்கிச் சென்ற லோரி, மாலை 5.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர், டோக் பெங் இயோவ் தெரிவித்தார்.
“48 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குறித்த லோரி ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக மூச்சுப் பரிசோதனை பரிசோதனையில் தெரியவந்ததாகவும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 44ன் கீழ் விசாரணைக்காக அவர் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் டோக் கூறினார்.