ஜோகூர் மாநில அளவிலான தைப்பூச விழாவில் சுல்தான் இப்ராஹிம் கலந்து சிறப்பிப்பு

ஜோகூரில் மாநில அளவிலான தைப்பூசக் கொண்டாட்டத்தில், ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் கலந்து கொண்டு பக்தர்களை மகிழ்வித்தார்.

50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோயிலில், இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) நடைபெற்ற தைப்பூச திருவிழாவையொட்டி நடைபெற்ற அன்னதான விருந்துக்கு வருகை தந்த ஜோகூர் சுல்தானை, பக்தர்கள் கை அசைத்து வரவேற்றனர்.

கோவிலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த அன்னதான கூடாரத்தில் அவர் சுமார் 40 நிமிடங்கள் வரை இருந்தார், மேலும் வசதியற்ற மாணவர்களுக்கு உதவிகளையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here