உலகளாவிய சுற்றுலாத் துறையில் போட்டித்தன்மையுடன் இருக்க visa-on-arrival முறையை நடைமுறைப்படுத்த பரிந்துரை- சுற்றுலா அமைச்சர்

உலகளாவிய சுற்றுலாத் துறையில் போட்டித்தன்மையுடன் இருக்க நாட்டிற்கு வருகை தந்ததும் விசா (visa-on-arrival) வழங்கும் முறையை அமல்படுத்த மலேசியா பரிசீலிக்க வேண்டும் என்று, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் பரிந்துரைத்துள்ளார்.

கோவிட்-19 தொற்றுநோயின் பாதிப்பில் இருந்து உள்ளூர் சுற்றுலாத் துறை மீட்சியடைந்து வருவதால், நாடு சுற்றுலாத்துறையை முன்னேற்ற பின்பற்றும் யுக்தி அதன் சந்தைப் போக்குகளுக்கு உணர்திறன் உடையதாக இருக்க வேண்டும்.

மலேசிய அதிகாரிகள் பயணிகளின் வருகையை சமாளிக்கவும், நாடு முழுவதும் உள்ள நுழைவு வாயில்களில் ஒழுங்கை பராமரிக்கவும் வல்லவர்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார், அத்தோடு சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தடுக்க பாதுகாப்பை ஒரு சாக்காகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.

“அனைத்து நாடுகளுக்கும், குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவிற்கும் visa-on-arrival விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்குமாறு உள்துறை அமைச்சகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன், இது பிராந்தியத்திற்குள் நமது போட்டித்தன்மையை இழப்பதைத் தடுக்க உதவும் ,” என்று அவர் கூறினார்.

மேலும் சுற்றுலாத் துறையானது சுற்றுலாப் பயணிகளை சிறப்பாகக் கவரும் வகையில் உள்ளூர் சுற்றுலாத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைத் தழுவி தற்போதைய குடியேற்றக் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் தியோங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here