காவல்துறை அதிகாரிக்கு RM50,000 லஞ்சம் வழங்கியதாக ஒரு நிறுவன இயக்குநர் மீது குற்றச்சாட்டு

கடந்த வாரம் போலீஸ் அதிகாரிக்கு ஒருவருக்கு லஞ்சம் வழங்கியதாக ஒரு கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் மீது, இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

முதல் குற்றச்சாட்டில், குற்றம் சாட்டப்பட்ட 53 வயதான கே டெக் சுவான் என்பவர், சிலாங்கூர் காவல்துறையின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையைச் சேர்ந்த 39 வயதான ஒரு காவல்துறை அதிகாரிக்கு RM50,000 லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது அவர் உரிமம் இல்லாமல் மானிய விலையில் டீசல் வைத்திருந்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக வழங்கப்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இரண்டாவது குற்றச்சாட்டில், அதே போலீஸ் அதிகாரிக்கு RM50,550 லஞ்சம் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இரண்டு குற்றங்களும் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு 11 மணி மற்றும் 11.10 மணிக்கு இடையில், Kampung Telok Gong, Port Klang, ஆகிய இடங்களில் உள்ள ஒரு சேமிப்பு களஞ்சியத்தில் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறித்த இரு குற்றச்சாட்டுக்களும் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி) சட்டம் 2009 இன் பிரிவு 17(பி) இன் பதிவு செய்யப்பட்டன, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் லஞ்சத்தின் மதிப்பில் ஐந்து மடங்கு அபராதம் அல்லது RM10,000, எது அதிகமோ அது விதிக்க வழி செய்கிறது.

இவ்வழக்கின் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் RM40,000 மதிப்புள்ள ஜாமீன் வழங்க நீதிபதி நோராஸ்லின் ஓத்மான் அனுமதித்ததோடு, மாதம் ஒருமுறை MACC அலுவலகத்தில் சென்று ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

வழக்கின் அடுத்த செவிப்படுப்பு மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here