மருமகனுக்கு லாபகரமான ஒப்பந்தமா? மறுக்கிறார் முஹிடின்

தனது மருமகனுக்கு லாபகரமான ஒப்பந்தம் வழங்கியது தொடர்பான குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் மறுத்துள்ளார். இதை நான் கடுமையாக மறுக்கிறேன். இது எனது மற்றும் எனது குடும்பத்தின் புகழை கெடுக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட தீங்கிழைக்கும் பொய்யாகும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

IRIS கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்திற்கு தேசிய ஒருங்கிணைக்கப்பட்ட குடியேற்ற அமைப்பு (NIISe) ஒப்பந்தத்தை வழங்குவதில் தான் ஒருபோதும் ஈடுபடவில்லை என்றும், அதில் திறந்த டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் முஹிடின் கூறினார்.

தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களில் இந்தக் கூறும் இருப்பதாக தாம் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here