மலேசிய ஆயுதப்படையின் 106 பேர் கொண்ட கள மருத்துவக் குழு துருக்கியே பயணம்

துருக்கியே – சிரிய நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டோரை மீட்கும் பணிக்காக, மலேசிய ஆயுதப் படையின் கள மருத்துவக் குழு இன்று அதிகாலை துருக்கியேக்கு அனுப்பப்பட்டது என்று, பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசன் கூறினார்.

41 வைத்தியர்கள் உட்பட மொத்தம் 106 இராணுவத்தினர் அனுப்பப்பட்டதாகவும், மேலும் அவசர சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மூன்று நடமாடும் கூடங்கள் மற்றும் ஒரு நடமாடும் சத்திரசிகிச்சை அரங்கு உள்ளிட்ட உபகரணங்களும் துருக்கியேக்கு அனுப்பப்பட்டன.

இந்த கள மருத்துவமனை ஆறு வாரங்களுக்கு செயற்படும் என்று தோக் மாட் கூறினார்.

கோலாலம்பூரில் உள்ள துருக்கியே தூதரகத்துடன் கலந்தாலோசித்த பிறகு, குழுவை மாற்ற முடிவு செய்ததாக அவர் மேலும் கூறினார்.

இது துருக்கியேக்கு அனுப்பப்படும் 3 வது தொகுதி மீட்பு குழு என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here