துருக்கியேயிலுள்ள SMART குழு உறுப்பினர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்- பிரதமர்

துருக்கியே மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மலேசிய சிறப்பு தேடல் மற்றும் மீட்புப் படை (SMART) உறுப்பினர்களுக்கு, சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று முன்மொழிந்தார்.

அத்தோடு, அவர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்புக்காக அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு சேவை பதக்கங்களும் வழங்கப்பட வேண்டும் என்று, அவர் இன்று நடந்த நாடாளுமன்ற அமர்வின்போது கூறினார்.

நேற்று நுர்டாகி அரங்கில், மலேசியாவின் SAR குழுவின் முகாமை பிரதமர் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here