EPF -ஐ திரும்பப் பெற அனுமதிக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை – துணை நிதி அமைச்சர்

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக நாட்டில் பொது முடக்கநிலை அமலில் இருந்தது முதல் தற்போது வரை, ஊழியர் சேமிப்பு நிதியிலிருந்து (EPF) அதன் 81 இலட்சம் உறுப்பினர்களால் மொத்தம் RM145 பில்லியன் திரும்பப் பெறப்பட்டது என்று துணை நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் மஸ்லான் கூறினார்.

“அதனால்தான் எதிர்காலத்தில் EPF திரும்பப் பெறுவதை அனுமதிக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை” என்று இன்று (பிப்ரவரி 16) நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அஹ்மட் மஸ்லான் கூறினார்.

நாட்டிலுள்ள அனைத்து மலேசியர்களினதும் EPF கணக்குகளின் சராசரி சேமிப்பு 2019 இல் RM16,600 ஆக இருந்தது, அனால் கடந்த ஆண்டு RM8,100 ஆக அதாவது 50 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

இதுதவிர “மலாய்க்காரர்களிடையே சராசரி சேமிப்பின் குறைவு ஏனைய இனத்தவருடன் ஒப்பிடும்போது மிக அதிகமாக இருந்தது, இது ஏப்ரல் 2020 இல் RM16,900 ஆக இருந்து 2022 இல் RM5,500 ஆக குறைந்துள்ளது” என்று அஹ்மட் மஸ்லான் மேலும் கூறினார்.

EPF சேமிப்புக்கு தன்னார்வ பங்களிப்புகளை உயர்த்துவது குறித்து பல்வேறு திட்டங்களை அரசாங்கம் வகுத்துள்ளது என்றும், “2023 வரவுசெலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் போது (பிப்ரவரி 24) அவை பற்றிய கூடுதல் அறிவிப்புகள் அறிவிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here