அம்னோவின் உச்சமன்ற உறுப்பினராக தான் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக டத்தோ லோக்மான் ஆடாம் தெரிவித்துள்ளார்.
அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தன்னைத் தொடர்பு கொண்டு, தனது பணிநீக்கம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்ததாக அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவின் மூலம் கூறினார்.
“இந்த பணிநீக்கம் ரத்து செய்யப்பட்டதன் மூலம், தான் இனி வரவிருக்கும் கட்சித் தேர்தலில் போட்டியிட முடியும்,” என்றும் அப்பதிவில் அவர் கூறியுள்ளார்.
லோக்மான் பிப்ரவரி 2020 இல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.