Teluk Cempedak கடற்கரையில் குளித்தபோது காணாமல்போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்

Teluk Cempedak கடற்கரையில் குளித்தபோது, நேற்று காணாமல் போனதாக தேடப்பட்ட இளைஞர், இன்று Tembeling Resort கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த இளைஞரின் சடலம் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 2.40 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது என்று, மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் பகாங் மாநில இயக்குநர் சே ஆடாம் ஏ ரஹ்மான் தெரிவித்தார்.

அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டவரின் சடலத்தை கண்டு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, மீட்புக் குழு அவ்விடத்திற்கு விரைந்தது, சடலத்தை மீட்டு, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு (HTAA) கொண்டு செல்லப்பட்டது.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 20 வயதான முஹமட் இக்மல் ஹக்கீம் அஹ்மட் மேலும் இரு நண்பர்களுடன் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here