ஜன விபாவா விசாரணை: வான் சைபுலிற்கு RM10 மில்லியன் லஞ்சம் வழங்கியதாக MACC ஐ குற்றம் சாட்டிய ஆராய்ச்சியாளர் கைது

முன்னாள் பிரதமரும் பெர்சாத்து கட்சி தலைவருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசினை லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கவைப்பதற்காக, டத்தோ வான் சைபுல் வான் ஜானுக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 10 மில்லியன் ரிங்கிட் வழங்கியதாகக் குற்றம் சாட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

MACC ஐ குற்றம் சாட்டிய வான் சைபுலிடம் பணியாற்றிய சுயேச்சை ஆராய்ச்சியாளர் முகமட் ஷபிக் அப்துல் ஹலீம் என்பவர் நேற்று புதன்கிழமை (பிப் 22) பிற்பகல் 3.30 மணியளவில் லேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்தபோது, கைது செய்யப்பட்டதாக MACC தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

பெர்சாத்து கட்சியின் தகவல் தொடர்பு தலைவருக்கு MACC RM10 மில்லியனை வழங்கியதாக கைது செய்யப்பட்ட ஆராய்ச்சியாளர் முகமட் ஷபிக் குற்றம் சாட்டியதாகவும், ஆனால் சமூக ஊடகங்களில் அவர் அதற்காக மன்னிப்புக் கேட்டதாகவும் ஆனாலும் இந்த மன்னிப்பை ஊழல் தடுப்பு ஆணையம் ஏற்கவில்லை என்று ஆசாம் மேலும் கூறினார்.

” ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காக அவர் சமூக ஊடகங்களில் மன்னிப்புக் கேட்டிருந்தாலும், இது MACC-யின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ஒரு விஷயம்” என்று இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 23) MACC தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here